தன்னோட வேலை முடிந்து போனால், அதன்பின் அஜித் யாரையும் கண்டுகொள்ள மாட்டார்! சினிமா பிரபலத்தின் பேச்சு
தமிழ் சினிமாவில் தல என நீண்டகாலமாக அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அஜித். பல சாதனைகளை படைக்கும் இவரது படங்களில் அடுத்ததாக விஸ்வாசம் வர உள்ளது.
இந்நிலையில் இமைக்கா நொடிகள் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணிப்புரிந்த ஆர்.டி.ராஜசேகர், அஜித்தின் ரெட், பில்லா-2 உள்ளிட்ட பிரபலங்களின் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவர் சமீபத்திய பேட்டியில், ’நான் அஜித்துடன் முதன்முறையாக ரெட் படம் பண்ணுவதற்கு முன்னே சிட்டிசன் படத்தில் ’பூக்காறா’ பாடலுக்கு பணிபுரிந்தேன். அந்த ஒரு பாடலுக்கு பணிபுரிந்ததற்காக அவரது படத்தில் என்னை சேர்த்துவிட்டார்.
அப்படிப்பட்ட நல்ல மனிதர் அஜித், ஆனால் அந்த படம் முடிவடைந்ததும் அவரை ஒளிப்பதிவாளராகிய என்னாலேயே பார்க்க முடியவில்லை. அவரும் நினைவுக்கூர்ந்து பார்க்கலாம் மாட்டார். நீ உன் வேலையை பார், நான் என் வேலையை பார்க்கிறேன் என சொல்லமால் உணர்த்திவிடுவார்’ என்றார்.