Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் பற்றிய பொய்யான செய்திக்கே கடலென குவிந்த கூட்டம்! தல ரசிகர்கள் எப்பவுமே மாஸ் தான் போங்க

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிந்த பாடில்லை.

தமிழ்நாடு, கேரளாவின் கிராமப்புற பகுதிகளில் படப்பிடிப்பு அல்லது படப்பிடிப்பு சம்பந்தமான வேலைகள் நடைப்பெற்று கொண்டு தான் இருக்கிறது. இதனால் அஜித் தனது கிராமப்பகுதிக்கு வர மாட்டாரா.. என ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் கேரளாவின் பள்ளிகொண்டா டோல்கேட் வழியாக வேலூர் வருகிறார் என்ற பொய்யான ஒரு செய்தி நேற்று இரவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இது பொய்யா உண்மையா என்று ஆராய கூட மனமில்லாமல் கேள்விப்பட்ட அத்தனை பேரும் கூட்டமாக அந்த டோல்கேட் பகுதிக்கு வந்து விடிய விடிய நின்றுள்ளனர்.

இதனால் அந்த இடமே ஒரு மாநாடு போல காட்சியளித்தது. தல ரசிகர்கள் என்றாலே கெத்து தான் என மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டனர்.