Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்நாட்டில் தளபதி என்றால் இந்தியா அளவில் தல தானாம்! சண்டையை மூட்டிவிடும் கூகுள்

தமிழ் சினிமாவை தற்சமயம் ஆட்கொண்டிருக்கும் இருப்பெரும் நடிகர்கள் என்றால் அது அஜித்தும் விஜய்யும் தான். நாளுக்கு நாள் இவர்களின் ரசிகர் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் போகிறது.

நல்ல வேளையாக இந்த தீபாவளிக்கு இவர்களின் படங்கள் எதுவும் நேருக்கு நேர் மோதி கொள்ளவில்லை. இல்லையென்றால், தற்போது டிவிட்டர் பக்கமே போக முடியாது.

ஆனாலும் இவர்களின் மோதலுக்கும் வாக்குவாதங்களுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை. தற்சமயம் இவர்களின் மோதலுக்கு தீனி போடும் விதமாக ஒரு விஷயம் சிக்கியுள்ளது.

அதாவது கூகுளில் who is the mass hero in tamilnadu என டைப் செய்தால் விஜய் பெயர் தான் வருகிறது. அப்போ தல அஜித் என்ன ஆனார் என நினைத்து கொண்டிருக்கையில், who is the mass hero in india என டைப் செய்தால் நம்ம தல பெயர் வருகிறது.

ரசிகர்களே அமைதியானாலும் இந்த கூகுள் சும்மா விடாது போலயிருக்குதே...