Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரஷாந்தின் மாஸ் ரீஎண்ட்ரி, முன்னணி ஹீரோ படத்தில் வில்லன், ரசிகர்கள் உற்சாகம்

90’ஸ் கிடஸ் யாராலும் மறக்க முடியாது நடிகர் பிரஷாந்தை. ஏனெனில் திருடா திருடா, ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் ஆகிய படங்களில் நடித்து அசத்தியவர் பிரஷாந்த்.

ஆனால், இவரின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனையால் சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார், இடையில் அவர் செய்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.

இந்நிலையில் பிரஷாந்த் அடுத்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரன் தற்போது நடித்து வரும் படத்தில் வில்லனாக நடிக்கின்றார் என கூறப்படுகின்றது. இச்செய்தி பலருக்கும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

ஏனெனில் நீண்ட வருடம் நடிக்காமல் இருந்த அரவிந்த்சாமி கூட தனி ஒருவனில் வில்லனாக நடித்து தான் மீண்டும் ரீஎண்ட்ரி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.