நடிகர் பிரஷாந்தின் சினிமா பயணமே திசை மாற இது தான் காரணமாம், வெளிவந்த உண்மை தகவல்

நடிகர்கள் by Tony
Topics : #Prashanth

பிரஷாந்த் 90களில் கொடிக்கட்டி பறந்த ஹீரோ. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய், அஜித்தே இவருடைய படங்கள் வருகின்றது என்றால் ஒதுங்கி நிற்பார்கள்.

அந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் பலம் வைத்திருந்தவர். ஆனால், இவரின் மார்க்கெட் தற்போது அதளபாதளத்திற்கு சென்றுள்ளது.

மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்க போராடி வருகின்றார், ஜானி என்ற படத்திலும் நடித்துள்ளார், இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் பிரஷாந்த் 5 வருடம் திருமண பிரச்சனையால் மிகவும் சோகத்தில் இருந்தாராம், பல நாட்கள் நீதிமன்றத்திற்கு அழைய, சினிமாவில் இருந்து முற்றிலும் விலகினாராம்.

ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் பிரஷாந்த் மிகவும் கஷ்டப்பட்டதாக அவருடைய தந்தை தியாகராஜனே கூறியுள்ளார்.