Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரையும் சிரிக்க வைத்த காமெடி நடிகர் மீது பிரபல நடிகருக்கு வந்த எதிர்பாராத சிக்கல்! உண்மை இதோ

சமீபகாலமாக பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வருபவர் மனோபாலா. படங்களையும் தயாரித்து வருகிறார். அரவிந்த் சாமி, திரிஷா நடித்திருக்கும் சதுரங்க வேட்டை படத்தை இவர் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் அரவிந்த் சாமிக்கு சம்பள பாக்கி உள்ளதால் அவர் டப்பிங் பேசவில்லையாம். அதனால் படம் தாமதகாகிறதாம். இந்நிலையில் அவர் மனோ பாலா மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் சம்பளபாக்கியான ரூ 1 கோடியே 79 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாராம். அத்துடன் மனோபாலா கூறுகையில் சம்பள பாக்கி இருப்பது உண்மை தான்.

அவர் டப்பிங் பேசி முடித்துக்கொடுத்தால் பட ரிலீஸ்க்கு முன் சம்பள பாக்கியை கொடுத்து விடுவேன் என கூறினேன். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார். இப்போது யாரோ சிலரால் தூண்டப்பட்டதால் அவர் இப்படியான ஒரு நடவடிக்கை எடுத்துள்ளார். நீதிமன்றத்தில் என் தரப்பு விளக்கத்தையும் பதிவு செய்வேன் என கூறியுள்ளார்.