Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் விட்டதை வைபவ் பிடித்துக்கொண்டார், இனி இது இவருக்கு தான் சொந்தம்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த சீமராஜா எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து தான் நடித்து வரும் படத்தில் மிக கவனமாக உள்ளார்.

தற்போது வைபவ் டாணா என்ற ஒரு படத்தில் நடிக்கவுள்ளார், இதில் இவருக்கு ஜோடியாக நந்திதா நடிக்கின்றாராம்.

சரி இதற்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன சம்மந்தம் என்று தானே கேட்கிறீர்கள், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த படம் காக்கிச்சட்டை.

இப்படத்திற்கு முதலில் டாணா என்று தான் தலைப்பு வைத்துள்ளனர், பிறகு ஒரு சில காரணங்களால் டைட்டில் மாற, இதை தற்போது வைபவ் பிடித்துவிட்டார்.