பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு டேனியல் கமிட்டான முதல் படம்- மறுபடியும் இவருடன் தானா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து வீட்டில் கலகலப்பாக பேசி வந்தவர் டேனியல். முதலில் இவர் பேசுவதை விரும்பிய சிலர் பின் இவருக்கு எதிராகவே திரும்பினார்கள் இதெல்லாம் பழைய கதை.
இம்முறை யார் ஜெயிப்பார்கள் என்பதை கூட மக்கள் கணித்துவிட்டார்கள், நிகழ்ச்சியும் ஒரு வாரத்தில் முடிய போகிறது. இதுவரை வீட்டில் இருந்து வெளியேறியவர்கள் அவரவர் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அதன்படி பிக்பாஸ் புகழ் டேனியல் ஒரு புதிய படம் கமிட்டாகியுள்ளார்.
ஜெய் நாயகனாக நடிக்கும் படத்தில் தான் கமிட்டாகியுள்ளார், அப்படத்தை அறம் பட புகழ் கோபி அவர்கள் தான் இயக்க இருக்கிறார். டேயினர் இதுபற்றி டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார்.
— Daniel Annie Pope (@Danielanniepope) September 23, 2018