Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவின் மார்டன் டே ஷங்கர் தான் முருகதாஸ்- ஸ்பெஷல்

முருகதாஸ் இந்திய சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் பலரும் இவர் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கின்றனர். சுள்ளான் ஸ்டார் முதல் சூப்பர் ஸ்டார் வரை எப்படியாவது இவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

அப்படி என்ன மாயம் செய்தார் முருகதாஸ் என்பதே பலரின் கேள்வி, முருகதாஸ் தீனாவில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து இன்று வரை 12 படங்கள் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் சர்கார் தீபாவளிக்கு வரவுள்ளது, அடுத்து கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கப்போகின்றார் என்று கூட பேச்சு எழுந்துள்ளது.

இப்படி பலரும் இவர் படத்தில் நடிக்க முக்கிய காரணம், இன்றைய சமூக பிரச்சனைகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கமர்ஷியல் படங்கள் வாயிலாக பல நல்ல சமூக கருத்தை மக்கள் மனதில் பதிய வைத்தவர்.

தனியார் மருத்துவமனையில் நடக்கும் மோசடி, விவசாயிகள் பிரச்சனை, ஏன் பலருக்கும் தெரியாத ஸ்லீப்பர் செல்களை கூட நமக்கு படத்தின் மூலம் தெரிய வைத்தவர்.

அந்நியன் படத்திற்கு பிறகு பெரியளவில் ஷங்கர் சமூக பிரச்சனையை கையில் எடுக்கவில்லை, சிவாஜியில் கூட ரஜினியின் மாஸே கை ஓங்கி இருந்தது, ஆனால், எத்தனை உச்ச நடிகர்கள் தன் படத்தில் நடித்தாலும் சரி, தனக்கென ஒரு பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தில் முருகதாஸ் ஒரு மார்டன் டே ஷங்கர் தான்.

இவரின் பிறந்தநாளான இன்று சினிஉலகம் தன் வாழ்த்துக்களை கூறிக்கொள்வதோடு, இதே போல் பல சமூக பிரச்சனைகளை சினிமாவில் முருகதாஸ் கொண்டு வரவேண்டும் என்பதே எல்லோரையும் போல் நம் விருப்பமும்.