விஜய காந்த் நடித்த கள்ளழகர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் சோனு சூட். பின் விஜய்யுடன் நெஞ்சினிலே, அஜித் நடித்த ராஜா, மஜ்னு, சந்திரமுகி என நடித்திருந்தார்.
ஆனால் அனுஷ்காவுக்கு வில்லனாக அவர் நடித்த அருந்ததி மூலம் பிரபலமானார். பல ஹிந்தி படங்களில் நடித்து வரும் அவர் கடைசியாக பிரபுதேவா நடித்த தேவி படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தேக்வாண்டோ விளையாட்டில் சிறப்புடன் செயல்பட்டதற்காகவும், அவ்விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பணியாற்றியதற்காக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது.