Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் படம் ஒன்றை கூட நான் பார்த்தது இல்லை! பிரபல நடிகரின் ஓப்பனான பேச்சு

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தளபதி விஜய். இளைய தளபதியாக இருந்தவர் அடுத்ததாக தளபதி ஆனார், தற்போது அதையும் தாண்டி சூப்பர் ஸ்டார் இடத்திற்கான தகுதியையே பெற்றுவிட்டார்.

இவரது படத்தில் உள்ள ஒவ்வொரு சிறு காட்சியும் பார்ப்போரை குஷிப்படுத்தும். ஆனால் நான் விஜய்யின் எந்தவொரு படத்தையும் இதுவரை பார்த்தது இல்லை என அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அவரது படம் ஒன்றைகூட பார்க்கவில்லை, ஆனால் அவரது எல்லா பட டிரைலர்களையும் பார்த்துள்ளேன். பயங்கரமான ஸ்டைலை அந்த மனிதர் வைத்துள்ளார் என்றார்.