Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடலில் விழுந்த என்னை தளபதி விஜய் தான் உயிரை கொடுத்து காப்பாற்றினார்! பிரபல நடிகரின் ஓபன்டாக்

சர்கார் படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக அட்லீயுடன் பணியாற்ற உள்ளார். விஜய்க்கு தற்சமயம் பல நண்பர்கள் இருந்தாலும் ஆரம்பத்தில் சிலப்பேர் மட்டுமே இருந்தனர்.

அவ்வாறான சிலரில் முக்கியமானவர் சஞ்சீவ். விஜய்யின் ஆரம்ப சில படங்களில் இவரை பார்க்கலாம். அதன்பின் சீரியல்களில் பிசியானார்.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் தான் என் உயிரை ஒரு தருணத்தில் காப்பாற்றினார் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், விஜய் நடித்த நிலாவே வா படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயம்.

க்ளைமேக்ஸ் நடுக்கடலில் கப்பலில் நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் கடலில் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தேன். அப்போது விஜய் தான் தனது உயிரையும் பொருட்ப்படுத்தாமல் கடலில் குதித்து காப்பாற்றினார்.

அப்போதைய விஜய்க்கும் இப்போதைய விஜய்க்கும் வளர்ச்சி மட்டும் தான் வித்தியாசம் என புகழ்ந்து கூறியுள்ளார்.