Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

1 வருட ஆளப்போறான் சாதனையை வெறும் 4 நாட்களில் மிஞ்சியிருக்கும் சிம்ட்டங்காரன்!

தமிழ் சினிமாவின் தளபதி என்றால் அது விஜய் தான். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் சர்கார். இந்த படத்தை விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கியுள்ளார்.

படத்தின் பாடல்கள் அக்.2.ல் வெளியாக உள்ள நிலையில் சிங்கிள் டிராக்காக சிம்ட்டங்காரன் கடந்த திங்கள் கிழமை வெளியானது. பலத்த எதிர்மறையான கமெண்ட்டுகளை இந்த பாடல் பெற்றாலும் யூடியுப்பில் பல சாதனைகளை செய்து கொண்டுதான் வருகிறது.

ஆனால் யாரும் எதிர்ப்பாராத தளபதியின் நம்பர் 1 பெஸ்ட் பாடலான ஆளப்போறான் தமிழனின் சாதனையையே ஓரங்கட்டியுள்ளது. அதாவது 431k லைக்குகளை பெற்றிருக்கும் ஆளப்போறான் தமிழனை 621k லைக்குகளை பெற்று முந்தியுள்ளது.

எப்படியோ தளபதியின் சாதனையை தளபதிதானே முறியடித்துள்ளார் என்று ரசிகர்கள் சந்தோஷமடைக்கின்றனர்.