Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மணிரத்னம் இயக்கத்தில் அஜித், விஜய்- மிரட்டல் தகவல் இதோ

மணிரத்னம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மெகா ஹிட் படம் ஒன்றை கொடுத்துவிட்டார். ஆம், இவர் இயக்கத்தில் வெளிவந்துள்ள செக்கச்சிவந்த வானம் செம்ம வசூலை தந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் மணிரத்னத்துடன் கதை, திரைக்கதை பணியில் வேலைப்பார்த்தவர் சிவா ஆனந்த்.

இவரிடம் ஒரு பேட்டியில் மணி சார் எப்போது அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றுவார் என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘ஏன் கண்டிப்பாக இருவருடனும் பணியாற்றுவோம், அதற்கான கதைகளும் தயாராகி தான் வருகின்றது.

அவர்கள் கால்ஷிட் சரியாக அமைந்தால் உடனே ஆரம்பித்துவிடலாம்’ என்பது போல் பதில் அளித்துள்ளார்.

மணிரத்னம் படம் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள், ஒருவேளை இது நடந்தால் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் தான்.