Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்திற்காக எந்த படத்திலும் இதுவரை செய்யாத காரியத்தை செய்திருக்கும் தளபதி விஜய்!

விஜய் நடிப்பில் தற்சமயம் உருவாகி முடித்திருக்கும் படம் சர்கார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். ரசிகர்கள் இடையே மிகப்பெரிய ஆவலை இப்படம் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2ஆம் தேதி சென்னையில் மிகப்பிரமாண்டமான முறையில் நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் முருகதாஸ் படத்தில் அரசியல் வசனங்களை நான் எழுதினேனா இல்லை விஜய் எழுதினாரா என்று கண்டிப்பாக ரசிகர்களுக்கு சந்தேகம் எழும் என்றார்.

ஏனெனில் அந்த அளவுக்கு படத்தில் அத்தனை வசனங்களும் விஜய்க்கு கச்சிதமாக பொருந்தியிருக்குமாம். ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி, உண்மையிலேயே படத்தில் நிறைய காட்சிகளுக்கு விஜய் தான் வசனம் எழுதியுள்ளாராம்.

அவரது கை வண்ணத்தில் தான் அரசியல் வசனங்கள் பட்டையை கிளப்ப உள்ளதாம். இதனால் இந்த வசனங்களை காண விஜய் ரசிகர்கள் ஆவலாக உள்ளனராம்.