Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு வந்த சோதனை, படு வருத்தத்தில் ரசிகர்கள்- இப்படி ஏன் நடக்கனும்?

விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் பெரிய நடிகர். இவர் அதிகம் பேச மாட்டாரா என்பது போய் சர்கார் பாடல் வெளியீட்டு விழாவில் மாஸாக பேசி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டார்.

சர்வதேச அளவில் IARA என்ற பெயரில் ஒரு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகர்களுக்கான வரிசையில் வெளிநாட்டு நடிகர்களுடன் மெர்சல் படத்திற்காக விஜய்யும் தேர்வானார், பின் அதை ஜெயித்தும் இருந்தார்.

இந்த விஷயங்களை எல்லாம் தளபதி ரசிகர்கள் ஏகபோகமாக கொண்டாடினார்கள். கடைசியில் ஒரு அதிர்ச்சி செய்தி அது என்னவென்றால் IARA விருது என்பதே பொய்யான விஷயமாம். இச்செய்தி கேட்ட விஜய் ரசிகர்கள் படு சோகத்தில் உள்ளனர்.

மெர்சலுக்காக வந்த விருது பொய் என்ற விவரத்தை முன்னணி பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளனர்.