Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் சிங்கர் பிரபலத்துக்கு யாருக்கும் தெரியாமல் உதவி செய்த விஜய்- வெளியே சொன்ன தொகுப்பாளர்

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் விஜய். இவர் செய்யும் உதவிகளால் எத்தனையோ குடும்பம் சந்தோஷமாக வாழ்கிறது என்று கண்டிப்பாக கூறலாம்.

அப்படி விஜய் யாருக்கும் தெரியாமல் செய்த உதவியை வெளியே கூறியுள்ளார் தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த்.

அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், விஜய் அவர்களை சந்தித்துள்ளேன், மிகவும் அமைதியானவர். ஒரு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளர் செந்தில்நாதன் என்பவருக்கு கண் பார்வை கிடையாது, எப்போதும் பத்ரி பத்ரி என கூப்பிட்டுக் கொண்டிருப்பார்.

அவரது நிகழ்ச்சியை பார்த்த விஜய் அவரை அழைத்திருந்தார், அவருடன் நானும் சென்றிருந்தேன். பணம், I-Pod போன்றவற்றை கொடுத்து இதை தொலைக்காட்சியில் எல்லாம் சொல்ல கூடாது என்று கூறியிருந்தார் என்றார்.