Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இத்தனை வருடம் தூங்கிக்கொண்டிருந்தியா? பாலியல் குற்றச்சாட்டுக்கு கோபமாக பதில் அளித்த நடிகர்

சினிமா துறையில் உள்ள பல நட்சத்திரங்கள் மீது தற்போது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழில் வைரமுத்து தன் மீது வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு பற்றி பேசும்போது 'காலம் பதில் சொல்லும்' என கூறியுள்ளார்.

இந்நிலையில் மலையாள நடிகர் முகேஷ் குமார் கோடீஸ்வரன் என்ற ஷோ இயக்கிய 20 வயது பெண்ணின் ஹோட்டல் அறைக்கு தொடர்ந்து போன் செய்து அழைத்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அதன் பின் அந்த பெண் வேறு அறைக்கு மாற்றப்பட்டு, பின் நிகழ்ச்சியில் இருந்தே வெளியேறிவிட்டாராம்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள முகேஷ் குமார் "எத்தனை வருடம் ஆனது? தூங்கிக்கொண்டிருந்தாயா? இதுபற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. என்ன வேண்டுமானாலும் செய்துகொள். சுப்ரீம் கோர்ட்டுக்கு கூட செல். எண்னிடம் இருந்து ஒரு பைசா கூட கிடைக்காது" என கூறியுள்ளார்.