Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் மகனின் பெயரில் இணையத்தில் நடந்த மோசடி! அதிகாரபூர்வ தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய்க்கு 1 மகனும் 1 மகளும் உள்ளார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்ததே. அவரது மகன் கூட விஜய்யின் வேட்டைக்காரன் உள்ளிட்ட சில படங்களில் பாடல் காட்சிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரது மகனின் பெயரில் இன்ஸ்டாகிராமில் ஒரு அக்கவுண்ட் இருந்தது. அதில் தனக்கு பிடித்த நடிகர் அஜித் மற்றும் விஜய் சேதுபதி தான் என்றும் கூறப்பட்டது. அதே நேரத்தில் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என நம் தளத்தில் கூறியிருந்தோம்.

தற்போது நமது தளம் சொன்னது போல் உண்மையில்லையாம். அந்த விஜய்யின் மகன் சஞ்சய் எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் இல்லையாம்.