Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு, பரபரப்பை கிளப்பும் பிரபலம்- இவரே இப்படி சொல்லிவிட்டார்

நடிகர் விஜய்யின் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. அதிரடி சரவெடியாக படத்தின் ரிலீஸ் இருக்கப்போகிறது என்பது மட்டும் உறுதி.

பட வியாபாரங்கள் சூடு பிடிக்க நடந்து வருகிறது, கிட்டத்தட்ட எல்லா இடத்திலும் படம் வியாபாரம் ஆகிவிட்டதாக தெரிகிறது.

இந்த நேரத்தில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் பாபநாசத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அதில் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தமிழன் என்ற முறையில் விரும்புகிறேன்.

அவர் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள், மக்களால் உயர்த்தப்பட்டவர் மக்களுக்கு நல்லது செய்தால் என்ன தவறு என அதிரடியாக பேசியுள்ளார்.