Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி எங்கயோ போய்ட்டார்- ஆரம்பகால நடிகையின் அசத்தல் பேட்டி

தளபதி விஜய் தற்போது மிக உயரமான இடத்தை அடைந்துள்ளார். இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இந்த உயரத்தை அவர் அடைய பல அவமானங்களை கடந்து வந்துள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக ரிலீஸாகவுள்ள சர்கார் படம் அவரது உயரத்தை இன்னும் அதிகரிக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.

இந்நிலையில் இவருக்கு ஆரம்பகாலத்தில் செந்தூர பாண்டி படத்தில் ஜோடியாக நடித்த யுவராணி சமீபத்திய பேட்டியில் தளபதியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அதில், விஜய் ஆரம்பத்தில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. தற்போது அவர் மிகவும் அமைதியாகிவிட்டார். அதிலும் ஆரம்பத்தில் பார்த்தைவிட இப்போது எங்கயோ போய்விட்டார் என்று பரவசமுடன் கூறியுள்ளார்.