Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ

தளபதி விஜய் தற்போது சர்கார் படத்தின் ரிலிஸில் பிஸியாக இருக்கின்றார். இப்படம் முடிந்து அடுத்து இவர் யாருடன் இணைவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஏனெனில் ஏற்கனவே அட்லீ விஜய் படத்திற்கான கதை விவாதத்தில் இருக்க, கிடைக்கின்ற கேப்பில் வேறு யாராது விஜய்யுடன் இணைவார்கள் என்று தெரிகின்றது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் இயக்குனர் அமீர், விஜய்யை சந்தித்து இரண்டு கதையை கூறியுள்ளார்.

அதில் ஒரு படம் குடும்ப படமாம், அப்படத்திற்கான டைட்டில் தான் கண்ணபிரான். ஆனால், விஜய் தற்போது மாஸ் பேன் பாலோயிங், அரசியல் கதையை தேர்ந்தெடுப்பதால் அதற்கும் தன்னிடம் கதை உள்ளதாக அவர் கூறியுள்ளார்.