Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கௌரவ இடத்தை தவறவிட்ட செக்கச்சிவந்த வானம், காரணம் இது தான்

சிம்பு, விஜய் சேதுபதி, அருண்விஜய், அரவிந்த்சாமி நடிப்பில் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்த படம் செக்கச்சிவந்த வானம். இப்படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்தது.

மணிரத்னம் படம் என்றாலே நன்றாக இருக்கும், ஆனால் பெரிதாக வசூல் வராது என்ற பேச்சு இருந்து வந்தது.

ஆனால், அதை முறியடிக்கும்படி செக்கச்சிவந்த வானம் வசூல் வேட்டை நடத்தியது, சுமார் ரூ 89 கோடி வரை இப்படம் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.

இந்த படம் ரூ 100 கோடி என்ற கௌரவ கிளப்பில் இணைந்திருக்கும், அடுத்தடுத்து ராட்சஸன், 96 படங்களின் வருகையால் இப்படத்தின் வசூல் கொஞ்சம் பாதித்து ரூ 100 கோடி கிளப்பை தொடமுடியாமல் போனது.