Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த விஷயத்தில் ரஜினி, விஜய் கூட இல்லை, இவர் மட்டும்தான்! முன்னணி இயக்குனரின் அதிரடியான பேட்டி இதோ

ரஜினி, கமல் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டனர். அடுத்ததாக விஜய் வருவதற்கான செயல்களில் இறங்கியுள்ளார். அஜித் இன்னும் எந்த செயல்களிலும் ஈடுப்படாமல் அமைதியாகவே உள்ளார்.

இந்நிலையில் பருத்திவீரன் உள்பட நல்ல ஹிட் படங்களை சினிமாவுக்கு கொடுத்த அமீரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில், ரஜினி, கமல், விஜய் இவர்கள் மூவரில் யாருக்கு அரசியல் மெண்டாலிக் பவர் அதிகமாக உள்ளது என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கமல் என கூறியது மட்டுமில்லாமல் அதற்கு விளக்கமும் அளித்துள்ளார். அதில், ரஜினி, விஜய்க்கு வெற்றி படங்கள் தான் அடையாளம். ரஜினிக்கு பாட்ஷா என்றால் விஜய்க்கு துப்பாக்கி.

ஆனால் கமலுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆளவந்தான், அன்பே சிவம், குணா என தோல்வி படங்கள் தான் அவரது அடையாளம். ஆனால் அவர் அதையெல்லாம் பார்த்து சோர்ந்து போகாமல் உள்ளதால், அவருக்கு தான் அனைத்தையும் தாங்கும் வலிமை உள்ளது.