Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு வடசென்னை செட் ஆகமாட்டார், படத்தில் நடித்தவரே கூறிய தகவல்

வடசென்னை திரைக்கு வந்து செம்ம வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சிம்பு தான்.

ஆனால், ஒரு சில காரணங்களால் அவர் நடிக்காமல் போக, அந்த வாய்ப்பு தனுஷிற்கு வந்தது.

இந்நிலையில் நம் சினிஉலகம் சார்பில் வடசென்னையில் நடித்த பவனிடம் ஒரு பேட்டி எடுக்கப்பட்டது.

அதில் அவரிடம் சிம்பு வடசென்னையில் நடித்திருந்தால் எப்படியிருந்து இருக்கும்? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் ‘படம் எடுப்பதற்கு முன்னாடி ஓகே, ஆனால், தற்போது தனுஷ் நடித்து படம் பார்த்துவிட்டதால் சொல்கிறேன், சிம்பு செட் ஆகமாட்டார்.

ஒருவேளை அவரை வைத்தே எடுத்திருந்தால் ஏதும் தெரிந்திருக்காது, தனுஷ் நடித்த பின் அவர் இடத்தில் வேறு யாரையும் பார்க்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.