Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலயா.. தளபதியா..? பிக்பாஸ் மஹத் கூறிய அதிரடி பதில்

தமிழ் சினிமா துறையில் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் இருக்கும் பிரிவினை தல-தளபதி. இருவருக்கும் மிக அதிக அளவில் தமிழ்நாட்டில் ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் சினிமா நட்சத்திரங்கள் எதாவது பேட்டி கொடுக்க வந்தால் "நீங்க தல ரசிகரா, இல்லை தளபதி ரசிகரா?" என்கிற கேள்வி நிச்சயம் இருக்கும். அந்த அளவுக்கு இந்த பிரிவினை உள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் 2 புகழ் நடிகர் மஹத் ஒரு பேட்டியில் இது பற்றி பேசியுள்ளார். " தலயா.. இல்லை தளபதியானு கேட்டா.. நான் தளபதினு தான் சொல்லுவேன்" என அவர் கூறியுள்ளார்.

"அஜித் சாரோட பரிசனாலிட்டி எனக்கு பிடிக்கும், ஆனால் ஆன் ஸ்கிரீனில் நான் சின்ன வயதில் இருந்தே ரசித்து பார்த்தது விஜய் அண்ணா தான்" என மஹத் மேலும்கூறியுள்ளார்.