Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் பைரவா பண்ணியாச்சு, அடுத்து அஜித்துடன், சந்தோஷ் நாராயணன் ஓபன்டாக்

விஜய் நடிப்பில் கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியான படம் தான் பைரவா. பரதன் இயக்கியிருந்த இந்த படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றியவர் சந்தோஷ் நாராயணன்.

படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் பாடல்கள் அனைத்தும் செம ஹிட். இவரது இசையில் சமீபத்தில் வடசென்னை ரிலீஸான நிலையில் அஜித்துடன் படம் எப்போது என்று பேட்டியளித்துள்ளார்.

அதில், அஜித் படத்துக்கு வெயிட் பண்ணி கொண்டுதான் இருக்கேன். படம் வந்துடுச்சுனு உடனே ஒகே செய்து பாடல்கள் நல்லா இல்லனா தப்பாகிடும். கபாலி பண்ணிட்டு இருந்தப்ப கூட அஜித் சாரை விமான நிலையத்தில் பார்த்தேன்.

என்னை முதலில் யார் என்றே தெரியாமல் பேசினார். பிறகு என் மனைவி தான் சொன்னார். நல்ல மனிதர், ரசிகர் ஒருவர் அங்கேயே போட்டோ எடுக்க முற்பட்டப்போது, இது போட்டோ எடுப்பதற்கான இடம் இல்லை என்று அழகாக எடுத்து கூறினார் என்றார்.