Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு ரசிகர்களை சீண்டும் சின்மயி- டுவிட்டர் பதிவால் தொடங்கிய பிரச்சனை

டுவிட்டர் பக்கத்தில் MeToo என்ற விஷயம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் எப்போது முடியும், எப்படி இறுதிக்கு வரும் என்பது தெரியவில்லை.

நேற்று திடீரென்று நடிகை லேகா வாஷிங்டன் MeToo என்ற டாக் போட்டு கெட்டவன் என பதிவு செய்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் சிம்புவையா பாலியல் குற்றச்சாட்டு புகார் கூறுகிறார் என்று அவரது ரசிகர்கள் கோபத்தில் அவரது பதிவுக்கு கீழ் திட்டினர்.

இப்போது சின்மயி தனது டுவிட்டரில் லேகா வாஷிங்டன், வெற்றியடைந்த விருதுகள் பெற்ற ஒரு டிசைனர், அவருடைய கம்பெனியும் மிகவும் வெற்றிகரமாக நடக்கிறது. அவரை பார்த்து சில ஆண்கள் தோல்வி அடைந்தவர் என்று கூறுவது எனக்கு சிரிப்பு வர வைக்கிறது என பதிவு செய்துள்ளார்.

லேகாவிற்கு ஆதரவு தெரிவித்து சிம்பு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் சின்மயி.