Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லேகா வாஷிங்டன் பாலியல் குற்றச்சாட்டிற்கு சிம்பு பக்கம் வந்த அதிரடி விளக்கம்

சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த செக்கச்சிவந்த வானம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.

இப்படம் சுமார் ரூ 89 கோடி வரை வசூல் செய்தது, இந்நிலையில் லேகா வாஷிங்டன் தன் டுவிட்டர் பக்கத்தில் மீ டூ டாக்கில் கெட்டவன் என்று பகிர்ந்தார்(அதாவது பாலியல் தொல்லை கொடுத்தவர் யார் என்பதன் க்ளூ).

கெட்டவன் என்றாலே சிம்பு தான், மேலும், அவர் தான் லேகாவுடன் அந்த படத்தில் இணைந்து நடித்தால், அதனால் அவராக தான் இருக்கும் என கூறப்பட்டது.

ஆனால், இதை சிம்பு தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது, அவர் எங்குமே சிம்புவின் பெயரை குறிப்பிடவில்லை.

அப்படத்தில் பலரும் பணியாற்றினார்கள், சிம்பு என்று அவர் கூறினால் தான் அவர் மீது கலங்கம் வரும், அவர் தான் குறிப்பிடவே இல்லையே என்று கூறியுள்ளதாக தெரிகின்றது.