பிரஷாந்த் தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கே போட்டியாக இருந்தவர். இவரின் தந்தை தியாகராஜன் பற்றி அனைவரும் அறிந்தது தான்.
அவர் பல படங்களில் நடித்தும் சில படங்களையும் இயக்கியும் உள்ளார், இந்நிலையில் இந்தியாவே தற்போது அதிர்ச்சியில் இருப்பது Me too என்ற ஒரு விஷயத்தில் தான்.
பல பிரபலங்கள் இந்த சர்ச்சையில் சிக்கித்தவித்து வருகின்றனர், இதில் பல கருத்துக்கள் உண்மையாக வந்தாலும் ஒரு சிலது பொய்யாகவும் வந்து செல்கின்றது.
சமீபத்தில் நடிகர் தியாகராஜன் மீது ஒரு பெண் புகைப்பட கலைஞர் பாலியல் புகார் கொடுக்க, அது அவரை மிகவும் பாதித்துள்ளது.
உடனே பத்திரிகையாளர்களை சந்தித்து நான் கண்டிப்பாக அந்த பெண் மீது வழக்கு தொடுக்க உள்ளேன், ஒரு நல்ல விஷயத்தை இப்படி தவறாக ஒரு சில பெண்கள் பயன்படுத்துகிறார்கள் என கோபமாக பேசியுள்ளார்.