Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா படத்தில் இணைந்துள்ள விஜய் பட பிரபலம்! யாரென்று தெரிந்தால் ஷாக்காகிடுவீங்க

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். இறுதிகட்டத்தை எட்டியுள்ள இதன் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.

சூர்யா இந்த படத்தில் மட்டும் இல்லாமல் கே.வி.ஆனந்த் இயக்கிவரும் பெயரிடபடாத படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். சொல்லபோனால் இந்த படப்பிடிப்பு தான் மிக வேகமாக நடைப்பெற்று வருகிறது.

இந்த இரு படங்களும் முடிவடைந்தவுடன் சூர்யா அடுத்ததாக இறுதிசுற்று இயக்குனர் சுதா கோங்ரா இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். இதன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என்பது ஏற்கனவே தெரிந்ததே.

இந்நிலையில் புது விஷயமாக சூர்யா படத்தில் முதன்முறையாக விஜய்யின் மெர்சல், சர்கார் படத்தின் பாடலாசிரியர் விவேக் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தான் துவங்கும் என்றே தெரிகிறது.