சர்கார், விஸ்வாசம் விடுங்க ஒரே ஒரு விஷயத்தில் விஜய்யை விட ஒருபடி அதிகமாக அஜித்- வருங்காலத்தில் தளபதி முறியடிப்பாரா?
அஜித்-விஜய் இருவருமே நண்பர்கள் தான். ஆனால் சினிமாவில் அவர்களது படங்களுக்கு எப்போதுமே அதிக சண்டை இருக்கும்.
பட வியாபாரத்தில், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில், டீஸர்-டிரைலர் சாதனைகளில் என எல்லா விஷயத்திலும் ஒரு போட்டி இருக்கும்.
அப்படி இப்போது ஒரு விஷயம் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதாவது, வில்லன் வேடங்களில் அதிகம் நடித்தது யார் என்பது தான்.
அஜித் வாலி, வரலாறு, மங்காத்தா என இந்த படங்களில் வில்லனாக நடித்துள்ளார், விஜய் எடுத்துக் கொண்டால் அழகிய தமிழ்மகன் படம் மட்டும் கூறலாம்.
இதனால் அஜித் ரசிகர்கள் இந்த விஷயத்தில் தல தான் மாஸ் என்று கூறி வருகின்றனர். வருங்காலத்தில் விஜய் இந்த விஷயத்தில் அஜித்தை தோற்கடிக்கிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.