தளபதி விஜய் தற்சமயம் சர்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ் தான் கதை திருட்டு சம்பந்தமான விஷயத்தில் சிக்கியுள்ளார்.
ஆனால் அது என்னுடைய கதை தான் அதை எங்கு வேண்டுமென்றாலும் நிரூபிக்க தயார் என்கிறார். இப்படி எவ்வளவு பிரச்சனை நடந்தாலும் தளபதி ரசிகர்கள் சர்கார் படத்திற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
தளபதி மீதுள்ள அவர்களின் அன்பு துளியும் குறையவில்லை. அதற்கு ஒரு சான்றாக தான் பிரபல நிகழ்ச்சியான நீயா நானாவில் பங்கேற்ற பார்வையாளர்களில் ஒருவர் தனக்கு பார்வை கிடைத்தால் அம்மா அப்பாவிற்கு பிறகு தளபதியை தான் பார்க்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
இதை கேட்டதும் அந்த அரங்கே அதிர்ந்தது.
எனக்கு கண் பார்வை வந்தால் நான் பார்க்க விரும்பும் முதல் நபர்
— Chennai Thalapathy Vijay Fc (@Vijay_FCChennai) October 28, 2018
எங்கள் அண்ணன் தளபதி விஜய் ♥️😍#ThalapathyVIJAY pic.twitter.com/Fr8jER2wHT