Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் அடுத்த படத்தை பற்றி வந்த தகவல்கள் பொய்! உண்மையை போட்டுடைத்த இயக்குனர்

தனுஷ் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான படம் வடசென்னை. வெற்றிமாறன் இயக்கியிருந்த இப்படம் வடசென்னையையும் தாண்டி பல இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த படத்திற்கு அடுத்ததாக தனுஷ் முண்டாசுப்பட்டி, ராட்சசன் பட இயக்குனர் ராமின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடபடாத இந்த படத்திற்கு தனுஷின் ஜோடி லட்சுமி மேனன் என்ற தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் உலா வந்தது.

ஆனால் இந்த தகவல் முற்றிலும் பொய்யாம். இதனை இயக்குனர் ராமே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.