Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதுகு வலியால் 5 மணிநேரமாக அஜித் செய்த விஷயம்- இதுவரை தெரியாத தகவலை சொன்ன பிரபலம்

அஜித் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதும் கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். அதில் அவருக்கு ஏற்பட்ட ஒரு விபத்தால் முதுகில் பிரச்சனை இருக்கிறது.

ஆனால் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரசிகர்களுக்காக படங்களில் ரிஸ்க்கான காட்சிகள் எல்லாம் நடிப்பார். எம்.எஸ். பாஸ்கர் அவர்கள் அஜித்துடன் கிரீடம் படத்தில் நடித்தபோது ஒரு சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், கிரீடம் பட படப்பிடிப்பின் போது வேறொரு நடிகருக்கான காட்சி எடுக்கப்பட்டிருந்தது. அப்போது அஜித் அவர்களை எங்களை எல்லாம் உட்கார வைத்துவிட்டு நின்றுகொண்டே இருந்தார், நான் உட்காருங்கள் என்றதுக்கு இல்லை என்னால் உட்கார்ந்தால் வலி என்று கூறி மதியம் 2 மணியில் இருந்து 7 மணி வரை நின்றுகொண்டே எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் பட்ட கஷ்டங்களை பார்த்து வலியின் இருந்து அவர் குணமாக வேண்டும் எல்லாம் வேண்டிருக்கிறேன். தன்மையானவர், ரொம்ப ரொம்ப ரொம்ப தங்கமானவர் அஜித் சார் என்று பேசியுள்ளார்.