Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் விக்ரம்! எந்த இயக்குனருடன் தெரியுமா

தமிழ் சினிமாவில் படத்துக்காக தனது முழு உழைப்பையும் கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாமி ஸ்கொயர் படத்திலும் அதை பார்க்க முடிந்தது.

இந்த படத்திற்கு அடுத்ததாக இவர் ஹாலிவுட் படமொன்றின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் மலையாள பட உலகின் வெற்றி இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம்.

இந்த ரன்வீர் ரஷீத் என்பவர் நமது வெற்றி மாறனை போல 3,4 வருடங்களுக்கு ஒரு படம் தர கூடியவர். இவர் கடைசியாக 5 வருடங்களுக்கு முன்னர் உஸ்தாத் ஹோட்டல் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை அங்கு கொடுத்திருந்தார்.

மேலும் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் மூலம் விக்ரம் 18 வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் நுழைய உள்ளார்.