Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவர்கள் கையை தட்டிவிடுவாரா? சிவகுமாரிடம் பிரபல இயக்குனர் கோபத்துடன் கேட்டுள்ள அதிரடி கேள்வி

நடிகர் சிவகுமார் செலஃபீ எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் கையில் இருந்த செல் போனை தட்டி விட்டது பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இணையத்தில் அவரை அனைவரும் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் லெனின் பாரதி சிவகுமாரை பார்த்து ஒரு கேள்வி ட்விட்டரில் கேட்டுள்ளார்.

"செல்ஃபி எடுத்தவரின் கையைத் தட்டிவிட்ட நடிகர் சிவக்குமாரின் கை குறைந்தபட்சம் தன் மகன்கள் கட் அவுட்களுக்கு பால் அபிசேகம் பண்ணுகிற, வாழ்த்துப் போஸ்டர் ஒட்டுகிற மற்றும் தன் மகன்கள் நடித்த படங்களை லைக் செய்கிற கைகளைத் தட்டி விடுமா...?" என அவர் கேட்டுள்ளார்.