Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நன்றி சொல்லாதீங்கண்ணே.. சிவகார்த்திகேயன் செய்துள்ள நெகிழ்ச்சி செயல்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவர் தொலைக்காட்சியில் இருந்து பின்னர் சினிமாவிற்குள் வந்து பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நெல் ஜெயராமன் என்பவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் முழு மருத்துவமனை செலவையும் ஏற்றுள்ளார்.

தனக்கு உதவி செய்யும் சிவகார்த்திகேயனை பார்த்து நன்றி தெரிவிக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டதால், சிவா உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை சந்தித்துள்ளார்.

"நன்றி சொல்லாதீங்கண்ணே, நலமாகி வாங்க அதுதான் தேவை" என நெல் ஜெயராமனிடம் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.