Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படப்பிடிப்பை முடித்து மீண்டும் மாணவர்களுக்கு ஆசிரியர் பணியை தொடங்கிய அஜித்- புதிய வைரல் வீடியோ

சினிமாவை தாண்டி மற்ற விஷயங்களில் ஆர்வம் காட்டக்கூடிய நடிகர்கள் சிலரே உள்ளனர். அதில் முக்கியமானவர் அஜித், சமைப்பது, பைக், கார் ரேஷ், போட்டோ கிராபி, விமான பயிற்சி கொடுப்பது என தன்னை மற்ற விஷயங்களிலும் ஈடுபடுத்தி வருகிறார்.

அப்படி அவர் பிரபல பல்கலைக்கழக மாணவர்களுக்கு குட்டி விமானம் தயாரிக்கும் பயற்சியை கொடுத்து வருகிறார். சமீபத்தில் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு வேலையை முடித்த அவர் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க தயாராகி விட்டார்.

அவர் அந்த கல்லூரிக்கு சமீபத்தில் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,