Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், விஜய்யின் கூட்டணியில் மங்காத்தா2 எப்போது உருவாகும்? வெங்கட் பிரபு கூறிய அசத்தலான பதில்

அஜித் நடிப்பில் கடந்த 2011ல் மங்காத்தா என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு. நடிகர் அர்ஜுனும் நடித்திருந்த இப்படத்தில் யுவனின் தீம் இசை பெரிதாக பேசப்பட்டது.

அஜித் ரசிகர்களையும் தாண்டி பொதுவான ரசிகர்கள் பார்த்து கொண்டாடிய இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் சூழல் அந்த நேரத்தில் அதிகமாக இருந்தது. அதுவும் இந்த பாகத்தில் அஜித்துடன் விஜய்யும் நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் அதற்குள் இருவரும் அவரவர் வழிகளை பார்த்து சென்றதால் இந்த இணைப்பு கைக்கூடாமலேயே போய்விட்டது. இருந்தாலும் வெங்கட் பிரபுவிடம் இருவரது ரசிகர்களும் மங்காத்தா-2 எப்போது என்ற கேள்வியை அவ்வப்போது கேட்டவாறு இருந்தனர்.

அதே போல் தான் தற்சமயமும் ஒரு ரசிகர் வழக்கமான அந்த கேள்வியை வெங்கட்பிரபுவிடம் கேட்டார். அதற்கு அவர் என்ன கூறினார் என்பதை நீங்களே பாருங்கள்...