Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லைசென்ஸ், ஹெல்மெட் இல்லாமல் போலீஸிடம் மாட்டிய தளபதி விஜய்! பிறகு என்ன செய்துள்ளார் பாருங்க

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு இப்போது ஒரு சிலர் தான் நண்பர்களாக உள்ளனர். ஆனால் சினிமாவுக்கு வந்த புதியதில் பல நண்பர்களை தன்னுடன் வைத்திருந்தார்.

ஆனால் தற்போது உள்ள வேலை பளுவால் அத்தகைய நண்பர்களுடன் இருப்பது குறைந்துள்ளது. அப்படிப்பட்ட விஜய்யின் நண்பரான ஸ்ரீநாத் சமீபத்திய பேட்டியில் விஜய்யின் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அதில், விஜய் சினிமாவில் வளர்ந்து வந்த நேரம் ஓர் இரவு நானும் அவனும் RX100 பைக்கில் வேகமாக மவுண்ட் ரோட்டில் சென்று கொண்டிருந்தோம். எங்களிடம் லைசென்ஸ், ஹெல்மெட் என எதுவுமே இல்லை.

அந்நேரம் பார்த்து அங்கு டிராபிக் போலீஸ் சோதனையில் இருந்தனர். நான் விஜய்யிடம் மச்சான்... அழுத்து மச்சான்.... அழுத்து என்றேன். நான் சொன்னது ஆக்ஸிலரேட்டரை ஆனால் அவனோ வேகமாக வண்டியை ஒட்டி சென்று போலீஸிடம் நிறுத்தினான்.

என்னாடா என கேட்டால் நீ தான்டா அழுத்த சொன்னனு என்னை பார்த்தான். நான் தான் அதன்பின் சார்..சார்.. பையன் டைரக்டர் S.A.சந்திரசேகருடைய மகன் என சொல்லி காப்பாற்றி அழைத்து வந்தேன் என்றார்.