Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் டான்ஸ் ஆடுவது எல்லாம் ஒரு விஷயமே இல்லை! அதிர்ச்சியாக்கிய காமெடி நடிகர்

விஜய், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவரது படங்கள் வந்தாலே அன்று தமிழகத்துக்கே திருவிழா போல் தளபதி ரசிகர்கள் செய்துவிடுவர். அது மட்டுமில்லாமல் விஜய் என்றதும் எல்லாருக்கும் உடனே நியாபகத்திற்கு வருவது அவரது டான்ஸ் தான். அவ்வளவு பிரமாதமாக நடனமாடக்கூடிய நடிகர்.

ஆனால் அவருடன் டான்ஸ் ஆடுவது எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று விஜய்யுடன் போக்கிரி போன்ற படங்களில் நடித்துள்ள காமெடி நடிகர் ஸ்ரீமன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அதில் அவர், ’விஜய் தான் என் வாழ்க்கையே. என்னை சினிமாவில் முன்னேற செய்த படிக்கட்டுகளில் அவரும் 3,4 வது படிக்கட்டுகளை பிடித்துள்ளார். மேலும் அவருடன் டான்ஸ் ஆடுவது மிக எளிது.

விஜய் வருவார், ஆடவேண்டிய டான்ஸ் ஸ்டெப்புகளை அப்படியே ஒரு பார்வை பார்ப்பார், அவ்வளவு தான் ஆட தயாராகிவிடுவார். அதுவும் அவருடன் என்னை போன்றவர்கள் ஆடுகிறார்கள் என்றால் நன்றாக நிறுத்தி நிதானமாக ஆடுவார்’ என்றார்.

இதெல்லாம் ஸ்ரீமன் சொல்ல கேட்கும்போது அப்படியா என்று தோன்றும். ஆனால் அதன் பின் தான் உண்மை வெளிவந்தது. ’நான் இவ்வளவு நேரம் சொல்லியதை எல்லாம் அப்படியே ஆப்போசிட்டா யோசிங்கள். உண்மையில் விஜய்யுடன் டான்ஸ் ஆடுவது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை.

பெண்டு கிளிஞ்சிடும். அன்றைக்கு நாம் ஜிம்முக்குலாம் செல்ல தேவையில்லை. அந்த டான்ஸ் மூவ்மெண்ட்டுலயே நமக்கு 2 கிலோ குறைஞ்சிடும்’ என்றார்.