Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் இந்த படம் சூப்பரா இருக்கு என விஜய் கூறியது எந்த படம் தெரியுமா?

அஜித்-விஜய் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள். இவர்கள் இல்லாது சினிமா எப்படி இருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது.

இவர்கள் படங்கள் ஒவ்வொரு முறை வரும்போதும் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகள் படைக்கும். அப்படி விஜய்யின் சர்கார் பல சாதனைகள் செய்து வருகிறது, அஜித்தின் விஸ்வாசம் படமும் சாதனை படைக்க தயாராகி வருகிறது.

இந்த நேரத்தில் சினி உலகத்திற்கு விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் பேட்டி கொடுத்த போது ஒரு சுவாரஸ்ய விஷயம் கூறியுள்ளார்.

அதாவது அஜித் நடித்த படத்தில் வேதாளம் படம் சூப்பர், அதுவும் ஆலுமா டோலுமா பாடல் அசத்தல் என விஜய் சொன்னதாக சஞ்சீவ் கூறியுள்ளார். வேறு என்னென்ன விஷயங்கள் பகிர்ந்துள்ளார் என்பதை இந்த வீடியோவில் கேளுங்கள்.