Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வீரம் ட்ரையின் சீனில் உண்மையில் என்ன நடந்தது தெரியுமா? விதார்த் போட்டுடைத்த உண்மைகள்

அஜித்தின் நடிப்பில் கடந்த 2014ல் வெளியாகியிருந்த படம் வீரம். அஜித் முதன்முதலாக சிறுத்தை சிவாவுடன் பணியாற்றிய படம்.

முழுக்க முழுக்க கிராமத்து கதையில் உருவாகியிருந்த இப்படத்தில் அஜித்திற்கு 4 தம்பி கதாபாத்திரங்கள் இருந்தன. அதில் மூத்த தம்பியாக நடித்த விதார்த் சமீபத்தில் பேட்டி ஒன்றினை அளித்தார்.

அதில், வீரம் படத்தின் ட்ரையின் காட்சி படமாக்கப்பட்ட போது அஜித்திடம் நான் மட்டுமில்லாமல் படக்குழுவே இந்த சீனில் டூப்பை பயன்படுத்தலாம் என கூறினோம்.

ஆனால் அவர் வேண்டாம், அவரும் ஒரு மனுஷன் தான். என்னுடைய புகழுக்காக மற்றவரை பயன்படுத்த கூடாது, நான் தான் ரிஸ்க் எடுக்க வேண்டும் என கூலாக சொன்னார் என்றார்.