Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விஸ்வாசம் கெட்டப்பை பார்த்து அவரது மகன் செய்த விஷயம்- ரீல் மகள் வெளியிட்ட தகவல்

அஜித்-சிவா கூட்டணியில் தயாராகும் 4வது படம் விஸ்வாசம். படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிட்டது, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

படத்திற்கான 2 ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் மட்டும் தான் இதுவரை வெளியாகியுள்ளது. அடுத்து படக்குழு என்ன செய்ய போகிறார்கள், அடுத்து என்ன ரிலீஸ் என்பது எல்லாம் அவர்களுக்கு மட்டுமே தெரியும். படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அனிகா படம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அப்போது அஜித்தின் 2 வேடத்தில் ஒன்றில் பெரிய மீசை வைத்திருப்பார். அதை அவரது மகன் பிரித்து விளையாடுவார், மிகவும் கியூட்டாக இருக்கும். அவர்களது குழந்தைகள் குறித்து அஜித் நிறைய பேசுவார் என்றார்.