Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் தினமும் இரவு 12 மணிக்கு இவருடன் தான் வாலிபால் ஆடுவாராம்- பிரபல நடிகரின் பேட்டி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித்குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வர உள்ளது.

இந்நிலையில் இவர் சினிமாவில் வளர்ந்து வந்த நேரத்தில் இவருக்கு கடும் போட்டியாளராக விளங்கிய பிரசாந்த் சமீபத்தில் அஜித்தை பற்றி பேட்டி அளித்துள்ளார்.

அதில், எங்களுக்கிடையேயான நட்பு இன்னும் நீடித்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது கூட படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இரு குடும்பத்தாரும் எங்கேயாவது வெளியில் செல்லுவோம். ஓட்டல்களில் ரூம் எடுத்து தங்குவோம் என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், அப்படி தான் ஒரு சமயத்தில் ஓட்டலில் தங்கியிருந்த பொழுது, அந்த ஓட்டலின் கார் பார்க்கிங்கில் இருக்கும் கார்களை எல்லாம் வெளியே நிறுத்திவிட்டு அங்கு வாலிபால் நெட்டை கட்டி இரவு 9 மணியிலிருந்து 12 மணி வரை அங்கு தான் விளையாடி கொண்டு இருப்போம் எனவும் கூறினார்.