Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதி பற்றி 8 வருடத்திற்கு முன்பே சொன்ன கார்த்திக் சுப்புராஜ் - தற்போது வைரலாகும் பதிவு

தற்போது விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர். ஆனால் அவர் ஆரம்பத்தில் குறும்படங்கள் மற்றும் சில படங்களில்சிறு வேடங்களில் தான் நடிக்க துவங்கினார்.

அதன் பின் தென்மேற்கு பருவக்காற்று படம் தான் அவரை பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது.

அந்த படத்தின் ரிலீசுக்கு முன் இயக்குனர் கார்த்திக்கு சுப்புராஜ் முகநூலில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதற்கு ஒருவர் "யார் விஜய் சேதுபதி?" என கேட்க, "விரைவில் தெரிந்து கொள்வீர்கள்" என கார்த்திக் சுப்புராஜ் பதில் அளித்துள்ளார்.

8 வருடங்களுக்கு முன்பு அவர் கூறியது போலவே தற்போது விஜய் சேதுபதி தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தெறியும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.