Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மணிரத்னம் இயக்கத்தில் தளபதி விஜய்யா? வெளிவந்த தகவல் இதோ

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சர்கார் படம் வசூல் சாதனை படைத்தது.

ஆனால், விஜய்யிடம் தொடர்ந்து ஒரே மாதிரியான மசாலா படங்களை தான் பார்க்கின்றோம் என ஒரு சிலர் அவர் மீது குற்றம் சாட்டினர்.

தற்போது கிளாஸ் இயக்குனர் மணிரத்னத்துடன் விஜய் கைக்கோர்க்கவுள்ளதாக நேற்றிலிருந்து ஒரு சில மீடியாக்களில் செய்திகள் பரவி வருகின்றது.

இதுக்குறித்து நாம் விசாரிக்கையில் மணிரத்னம் அடுத்தப்படத்தின் கதை விவாதத்தில் விரைவில் இறங்கவுள்ளாராம். அதில் யார் ஹீரோ என்பது இன்னும் முடிவாகவில்லை.

அதே நேரத்தில் விஜய் அட்லீ படத்தை தவிர வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.