Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிளாட்பாரத்தில் தூங்கிய நடிகர் R.பார்த்திபன்! நூலிழையில் உயிர் தப்பினேன் - உருக்கமாக பேசிய வீடியோ

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் ரசிகர்கள் பேசும்படியான பல படங்களை கொடுத்தவர். அவர் சமீபத்தில் விஷால் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

அப்போது அவர் தன் குடும்பம் ஆரம்பகாலத்தில் பட்ட கஷ்டம் பற்றி பேசியுள்ளார். சென்னை MMDA காலனியில் ஒரு வீட்டில் அவர்கள் இருந்தார்களாம். அப்போது மழைக்காலத்தில் வீடு ஒழுகுமாம். மேலும் ஒருமுறை அவர் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தாராம். அப்போது சிறுநீர் கழிக்க எழுந்து சென்றபோது திடீரெனெ சத்தம் கேட்டதாம்.. திரும்பி பார்த்தால் ஒரு லாரி அவரது பாயில் ஏறி நின்றிருந்தது.

நான் அங்கு இருந்திருந்தால் என் உயிர் அப்போதே போயிருக்கும் என பார்த்திபன் உருக்கமாக பேசியுள்ளார்.