Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கு குடிசை மட்டும் போதும்! கண்ணீர் விட்டு அழுத பாட்டியின் ஆசை நிறைவேற்றிய ராகவா லாரன்ஸ்

கடந்து போன கஜா புயல் ஏழை மக்கள் பலரின் வாழ்க்கையை சுருட்டி போட்டுவிட்டது. அரசை விட சமூக சேவை செய்யும் உள்ளங்கள் தான் களத்தில் இறங்கி வேகமாக மக்களுக்கு உதவின.

அஜித், விஜய், ரஜினி, விஜய் சேதிபதி, சிவகார்த்திகேயன், அருண் விஜய் என பல சினிமா பிரபலங்கள் நிதி உதவி செய்தார்கள். இந்நிலையில் அண்மையில் எனக்கு வேறு எதுவும் வேண்டாம்.

இருக்க ஒரு குடிசை போதும் என புயலால் பாதிக்கப்பட்ட ஒரு பாட்டி கண்ணீர்விட்டு அழுத வீடியோ சமூகவலைதளங்களில் வேகமா பரவியது.

ஏற்கனவே ராகவா லாரன்ஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசை கட்டி தருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் பாட்டியின் வீடியோவை பார்த்த பின் அவருக்கு தான் முதல்வீடு என கூறினார்.

தற்போது அவர் அந்த பாட்டிக்கும் வீடு கட்டி கொடுக்க களத்தில் இறங்கியுள்ளார். இதற்காக பூமி பூஜையும் போட்டுள்ளார்.